
கோலாலம்பூர், டிச 12 – திரெங்கானு மாச்சாங்கில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த ஒரு பயங்கர விபத்து, அவர் பயணித்த ஆயுதப்படை லாரி ஒரு காரை முந்திச் செல்ல முயன்றபோது அதன் பாதையில் நுழைந்த புரோட்டான் வீராவுடன் மோதியதால் ஏற்பட்டது.
தானா மேராவிலிருந்து Kem Desa Pahlawan சென்று கொண்டிருந்த Hicom Handalan ராணுவ லோரியின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பயணியான 39 வயதுடைய பாமி டாருஸ் ( Fahmey Darus ) விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார் என மாச்சாங் போலீஸ் தலைவர் அகமட் ஷபிகி உசேய்ன் ( Ahmad Shafiki Hussin ) தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தை அவர்கள் அடைந்ததும், கோத்தா பாருவிலிருந்து கோலா கிராய் நோக்கி தனது புரோட்டோன் வீராவில் சென்று கொண்டிருந்த ஒரு ஓட்டுநர் அவருக்கு முன்னால் இருந்த காரை முந்திச் செல்ல முயன்றார்.
அவர் எதிர் பாதையில் நுழைந்ததால் ஆயுதப் படை லோரி அக்காரை தவிர்க்க முடியாமல் அதன் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த ராணுவ லோரியில் இருந்த ராணுவ வீரர்களில் மூவர் சொற்ப நிலையில் காயத்திற்குள்ளாகினர்.
மேலும் புரோட்டோன் வீரா கார் ஓட்டுனர் கடுமையாக காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1)இன் விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்ட வருவதாக Shafiki தெரிவித்தார்.



