Latestமலேசியா

மாம்பழ ஊறுகாய் விற்று தனிப்பட்ட சொகுசு விமானம் வாங்கிய தொழிலதிபர் அலிப் சுக்ரி

கோலாலம்பூர், ஜூலை 24- பரபரப்பான தொழில்முனைவரும் , செல்வாக்குமிக்கவருமான டத்தோ Aliff Syukri , தனது மூத்த மகன் Amar Ahyan சேர்ந்து மாம்பழ ஊறுகாய்களை விற்பனை செய்து சம்பாதித்த பணத்தில் தற்போது ஜெட் விமானத்திற்கு உரிமையாளராக இருக்கிறார்.

38 வயதான Aliff, தனது மனைவி மற்றும் மகனுடன் கருப்பு தனியார் ஜெட் விமானத்தில் ஏறும் உற்சாகமான வீடியோவைப் Instagramகிராமில் பதிவேற்றப்பட்டதன் மூலம் தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்தார்.

கிட்டத்தட்ட ஒரு நிமிட காணொளியின் மூலம், Aliff மற்றும் அவரது மூத்த மகன் Ammar Ahyan, தனியார் ஜெட் விமானத்திற்குள் நுழைந்து, சொகுசு விமானத்தில் உள்ள உள்ள வசதிகளை சுட்டிக்காட்டி சுருக்கமான விளக்கத்தை அளித்ததை காணமுடிந்தது.

இறைவனின் கருணையினால் Ammar Ahyanனுடன் மாம்பழ ஊறுகாய்ளை விற்றதன் மூலம், நாங்கள் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்க முடிந்தது என்று அவர் கூறினார்.

அண்மையில் தனது Toyota Vellfire MPV வாகனத்தின் பதிவு எண் லட்சக்கணக்கான ரிங்கிட்டை எட்டியதாகக் வெளியான தகவல்களை இதற்கு முன் Aliff மறுத்திருந்தார்.

உள்நாட்டு வருமான வாரியம் தன்னை தேடும் கண்டறியும் வாய்ப்பை வழங்குவதை தவிர்க்கவே பெயரை வெளியிட அவர் மறுத்தாக கூறப்பட்டது.

இருப்பினும், Aliff வாங்கி வைத்திருப்பதாக கூறப்படும் தனியார் ஜெட் விமானத்தின் விலையை உறுதிப்படுத்த முடியவில்லை.

புதிய வடிவத்தில் தனியார் உரிமையாளருக்கு அதிகம் விற்பனையாகும் Cessna 172 விமான மாடல் சுமார் 1.6 மில்லியன் ரிங்கிட்என மதிப்பிடப்பட்டுள்ளதாக இணைய தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!