
பாலிங் , செப்டம்பர் -23 ,
மாரடைப்பால் இறந்த ஒருவருக்கு எதிரான மிரட்டல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 27 வயதுடைய அந்த இருவரும் குற்றவியல் சட்டத்தின் 385 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக பாலிங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் துணை Superintendan அகமட் சலிமி ( Ahmad Salimi Md Ali ) கூறினார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை மணி 1.15க்கு 74 வயது மாது அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதற்கு முன்னதாக இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்த தனது மகன் போலீசினால் தாம் தடுத்துவைக்கப்பட்டதோடு கை தொலைபேசியும் அவர்கள் எடுத்துக் கொண்டதாகவும் 200 ரிங்கிட் ஒப்படைத்தால் மட்டுமே அதனை ஒப்படைக்க முடியும் என கூறியதாக அந்த பெண்மணி தெரிவித்தார்.
பிறகு தனது மகனிடம் பணத்தை கொடுத்து கை தொலைபேசியை வாங்கி வரும்படி பணித்ததாகவும் புறப்பட்டபோது திடீரென கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளான்.
தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பாரிட் பஞ்சாங் (Parit Panjang) சுகாதார மருத்துவமனை அதிகாரிகள் அந்த மாதுவின் 32 வயது மகன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இறந்தவரின் உடலில் எந்த பகுதியிலும் காயம் ஏற்பட்டற்கான அறிகுறிகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படாவிட்டாலும் , அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அலோஸ்டார் சுல்தானா பஹியா (Sultanah Bahiyah) மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அகமட் சலிமி (Ahmad Salimi ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.