Latestமலேசியா

மிஸ் அண்ட் மிஸ்டர் கிராண்ட் சீ வேர்ல்ட் 2025; வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா

கோலாலம்பூர், ஜூலை 29- நேற்று, பங்சார் இந்தியா Gate உணவகத்தில் Miss and Mr Grand Sea World 2025 போட்டியின் மலேசிய வெற்றியாளர்களைக் கொண்டாடும் வகையில், பாராட்டு விழா ஒன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் மலேசிய அணியை வழிநடத்திய தனிநபர் திறமை அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியும் மலேசியாவின் தேசிய இயக்குநருமான முருகன் மைக்கேல் இந்த பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Majlis Kebudayaan மற்றும் Warisan Nusantaraவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன், Golden Empire Mediaவின் மலேசிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா, Mrs Grand Sea World 2024இன் வெற்றியாளர் Queen ஜெயா பாரதி, மற்றும் MSK Film Production நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர் K.Selvamariey ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அனைத்து வெற்றியாளர்களும் வெகுவாக பாராட்டப்பட்டு, இனி வரும் காலங்களிலும் இது போன்ற போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று உச்சத்தை தொட வேண்டுமென்று ஊக்கமளிக்கப்பட்டனர்.

மேலும் சர்வதேச அரங்கில் மலேசியாவை பிரகாசிக்கச் செய்ததில் முருகன் மைக்கேலின் வலுவான தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளும் பாராட்டப்பட்டது.

2024இல் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்ற Queen Jeya Barathi தனது வெற்றி பயணத்தை தொடங்கியது முதலே போட்டியாளர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு மேலும் உற்சாகமூட்டினார்.

இந்த மாபெரும் Grand Sea World 2025 போட்டியில் Sivabalan Vilchamay முதல் நிலையில் வெற்றியாளராகவும் Sangeeta Tamil Salvan இரண்டாம் நிலை வெற்றியாளர்களாகவும் வாகை சூடியுள்ளனர்.

மேலும் Anu Sri Perumaal, Miss Curvy Grand Sea World விருதையும் Niccolle Kaithlynn Sivakumar, Miss Teen Grand Sea விருதையும் ஒருசேர தட்டிச் சென்றுள்ளனர்.

Diyara Akshita Devulapalli Princess Grand sea World, Umah Jeralene Louis Adaikalasamy Mrs Classic Grand Sea மற்றும் Kulbir Kaur Pindar Singh Mrs Classic Grand Sea பட்டங்களையும் வென்றுள்ளனர்.

இந்த Grand Sea World 2025 இல் மலேசியா, போர்னியா, சவுதி அரேபியா, Uae, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரியா உட்பட மொத்தம் 17 நாடுகள் பங்குபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!