
அலோர் காஜா, டிசம்பர் 17-மலாக்கா, அலோர் காஜாவில் மீண்டும் ஒரு பேருந்து ஓட்டுனரின் ஆபத்தான செயல் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 வினாடி வீடியோவில், இளஞ்சிவப்பு நிற பேருந்து ஒன்று இரட்டை கோடு பகுதியில் இருந்து திடீரென திரும்பி, roundabout வட்டச் சாலைக்குள் நுழைந்தது.
இதையடுத்து சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் மலாக்கா கிளை, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்திற்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாலை விதிகளை மீறியதாக நிரூபிக்கப்பட்டால், ஓட்டுநருக்கு 300 முதல் 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
கடந்த வாரமும், இதே போன்றதொரு நின்று நின்று செல்லும் பேருந்து ஓட்டுனர் zig zag முறையில் ஓட்டி, பெரோடுவா ஆக்சியாவுடன் மோதும் நிலை ஏற்பட்டது.
அப்போது அவர் ஷாபு வகை போதைப்பொருளை உட்கொண்ட போதையில் இருந்ததாக போலீஸ் உறுதிப்படுத்தியது.
எனவே, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக விளங்கும் எந்தச் செயலுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென JPJ எச்சரித்துள்ளது.



