
அபுதாபி, டிசம்பர் 8 – ‘McLaren Formula 1’ அணியின் ஓட்டுநர் Lando Norris, அபுதாபியில் நடந்த இறுதிப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நிலையில், புள்ளி கணக்கில் இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்று தனது முதலாவது ‘ஃபார்முலா’ 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கடந்த 4 ஆண்டுகளாக உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்திருந்த Max Verstappen-னிடமிருந்து அப்பட்டம் தற்போது Lando Norris-இடம் கைமாறியுள்ளது.
பந்தயத்தில் Verstappen முதல் இடத்திலும், Norris-இன் அணி இரண்டாம் இடத்திலும் வெற்றி வாகை சூடினாலும் அப்பந்தயத்தின் முழுப்புள்ளி கணக்கில் Norris சாம்பியனாக தேர்வுச் செய்யப்பட்டார்.
இந்த வெற்றிக் களிப்பில் நெகிழ்ந்த Norris கண்ணீர் ததும்ப தனது பெற்றோருக்கு வானொலி வாயிலாக தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். அதே வேளை McLaren அணித் தலைவர் “இது மிகவும் சிறப்பான தருணம்” என்று பெருமிதமாக கூறினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரிட்டனுக்கான அடுத்த உலக பட்டம் இது என்பதும், அதே நேரத்தில் McLaren-இன் 13வது சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.



