
செலங்காவ், டிச 17- இன்று அதிகாலை மணி 12.50 அளவில் சரவா , செலங்கா, சிம்பாங் முகாவில் செம்பனை எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லோரி ஒன்று பல அடுக்குகளைக் கொண்ட மேம்பாலத் தூணில் மோதிய விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்த லோரியின் ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் சிக்கிக் கொண்டதால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
செலங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சிபுஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவசர அழைப்பை பெற்றதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு செயல்பாட்டு மையத்தின் (PGO) பேச்சாளர் தெரிவித்தார்.
மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி வாகனத்தை வெட்டி பிரித்து சிக்கிக் கொண்ட ஓட்டுநர் மீட்கப்பட்டார்.
எனினும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக அவரது உடல் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



