
கோலாலம்பூர், செப் 8 – மேபேங்க் இன்று MAE செயலியில் ஒரு இடையூறு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. காலையில் ஒரு தற்காலிக தொழில்நுட்பக் கோளாறை சந்தித்த பிறகு அதன் முக்கிய செயல்பாடு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறியது.
வங்கி வாடிக்கையாளர்கள் செயலியின் முக்கிய சேவைகளைப் பயன்படுத்துவதை மீண்டும் தொடங்கலாம், அதே வேளையில் பாதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக மேபேங்க்2யூ வலைத்தளத்தைப் பயன்படுத்துமாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் மே பேங்க் வலியுறுத்தியது.
MAE செயலியின் முக்கிய செயல்பாடு இப்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் SMS TAC ஐப் பயன்படுத்தி வழக்கம் போல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேபேங்க்2யூ வலைத்தளத்தையும் பயன்படுத்தலாம் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்து சேவைகளையும் விரைவில் முழுமையாக மீட்டெடுக்க அதன் குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்த பொருளம் உறுதியளித்தது.
இந்த செயலிழப்பு, MAE செயலியில் சில பில் செலுத்துதல் மற்றும் பணப் பரிமாற்ற செயல்பாடுகள் உட்பட பல அம்சங்களைப் பாதித்தது.
எனினும் கணக்கு நிலுவைகளைச் சரிபார்த்தல், சொந்த அல்லது பிற கணக்குகளுக்கு நிதியை மாற்றுதல், DuitNow மற்றும் ஸ்கேன் & Pay பரிவர்த்தனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை இந்தக் காலகட்டத்தில் இன்னும் அணுக முடியும் என்று கூறப்படுகிறது. சாத்தியமான தற்காலிக பரிவர்த்தனை வரம்புகள் குறித்து MAE செயலியில் ஒரு அறிவிப்பு மூலம் மேபேங்க் பயனர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளது.