Latestமலேசியா

ரப்பர் குழாய்,ஹெங்கர் மூலம் மனைவியை தாக்கிய லோரி உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

புத்ரா ஜெயா, டிச 23 -இதற்கு முன் இரண்டு குற்றங்களுக்காக தண்டனையை பெற்றுள்ள லோரி உதவியாளர் ஒருவர் தனது மனைவியை ரப்பர் குழாய் மற்றும் துணிகளை உலர்த்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஹெங்கரினால் தாக்கி காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

40 வயதான பைசல்ருல்லா உமர் ஜூகியின் Faisalrullah Omar Zuki யின் சிறைத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து நீடிக்கும் என்று மாஜிஸ்திரேட் எஸ்ரின் ஸக்கரியா ( Ezrene Zakariah ) உத்தரவிட்டார்.

புத்ரா ஜெயா, Precinct 9 இல் உள்ள தங்களது வீட்டில் டில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை உள்ள அவர்களது வீட்டில் நோர் ஹசிமா அகமட்டை ( Nor Hazyimah Ahmad ) காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவு மற்றும் 326 ஆவது பிரிவு A யின் கீழ் Faisalrullah மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நவம்பர் 13 ஆம் தேதி தனது
கணவருக்கு எதிராக Nor Hasyimah போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அன்றைய தினமே Faisalrullah கைது செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!