
மோஸ்கோவ், நவம்பர்-8 – ரஷ்யாவில் காலி வீட்டின் மீது தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஐவர் உயிரிழந்த வேளை, இருவர் காயமடைந்தனர்.
நால்வர் சம்பவ இடத்திலும் இன்னொருவர் மருத்துவமனை செல்லும் வழியிலும் மரணமடைந்தனர்.
அந்த 7 பேரை ஏற்றியிருந்த Ka-226 இரக ஹெலிகாப்டர், விழுந்து நொறுங்கியதுமே தீப்பற்றி முற்றாக எரிந்துபோனது.
17 தீயணைப்பு வண்டிகளில் வந்த 51 வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர்.
பறக்கும்போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைத் தொடங்கியுள்ளது.
அதிக உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதுகாப்பில் குறைப்பாடு இருந்திருப்பதால் தனியாகக் குற்றவிசாரணையும் நடைபெறுகிறது.



