Latestமலேசியா

வங்சா மாஜூ பகுதியில் “பார்க்கிங் பிடிக்க” பொருட்கள வைப்பதா? அனைத்தையும் பறிமுதல் செய்தது DBKL

கோலாலம்பூர், அக் 16 – DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் வாங்சா மாஜு பகுதியில் வாகன நிறுத்துவதற்கான இடங்களை முன்கூட்டியே பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத பொருட்களை அகற்றும் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிககையின்போது ஆறு குற்றப் பதிவுகளும் வழங்கப்பட்டன. அக்டோபர் 11 ஆம்தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய டயர்கள் மற்றும் துணி உலர்த்தும் கம்பிகள் உட்பட பல்வேறு பொருள்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இத்தகைய பொருட்களை சில நபர்கள் பயன்படுத்துவதைக் கவனித்த குடியிருப்பாளர்கள் பல புகார்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகனங்களை நிறுத்தும் இடங்களுக்காக பயன்படுத்தாத பொருட்களை முன்கூட்டியே வைக்கும் நடவடிக்கை மற்றவர்கள் வாகனங்கள் நிறுத்துவதறகு சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கடைத் தொகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கார் நிறுத்தும் இடங்கள் குறைவாக இருக்கும் இடங்களில் இத்தகைய போக்கு அதிகமாக உள்ளது. சில குடியிருப்புப் பகுதிகளில், நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. குடியிருப்பாளர்கள் சாலையின் முழுப் பகுதிகளையும் ஒதுக்குவதற்கு பெரிய பிளாஸ்டிக் பீப்பாய்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த தற்காலிக தடுப்புகள் அனைத்தும் இறுதியில் அதிகாரிகளால் அகற்றப்பட்டன. கோலாலம்பூர் மாநாகர் மன்றம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். தேவைப்படும் இடங்களில் குறிப்பாக வாகன நிறுத்துமிடங்களில் சட்டவிரோத பொருட்கள் முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் DBKL தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!