
சிங்கப்பூர், ஜனவரி-16-சிங்கப்பூர் வரலாற்றில் முதல் முறையாக எதிர்கட்சித் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
50 வயது பிரிதாம் சிங்கின் நீக்கத்தைப் பிரதமர் லோரனஸ் வோங் முறைப்படி அறிவித்தார்.
நாடாளுமன்ற செயற்குழுவிடம் பொய் கூறிய குற்றச்சாட்டில் அவர் தண்டிக்கப்பட்டதால், இனியும் பதவியில் தொடர இயலாது என வோங் சொன்னார்.
சட்டத்தையும், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் கட்டிக் காக்க இந்நடவடிக்கை அவசியம் என்றார் அவர்.
சிங்கப்பூர் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி 1955-ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்தாலும், 2020-ல் ஆண்டில் தான் அது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரின் முதல் சட்டப்பூர்வ எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட பிரிதாம் சிங், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பதவியை இழந்துள்ளார்.
புதியத் தலைவரை நியமிக்க தொழிலாளர் கட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



