
பாங்கி, அக் 9 –
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டின் சுற்றுச்சூழல் தூய்மையை வலுப்படுத்த இரண்டு புதிய கொள்கைகளை வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு செயல்படுத்தும்.
இதில் வணிக உரிமங்களைப் புதுப்பிப்பதற்கு கழிப்பறை சுத்தம் ஒரு நிபந்தனையாக மாற்றுவதும் அடங்கும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர்
ஙா கோர் மிங் ( Nga Kor Ming ) தெரிவித்தார்.
நாட்டில் மாநகர் தகுதியைக் கொண்ட 20 பகுதிகளில் உள்ள இடங்களைச் சேர்ந்த உணவகங்கள் , பானங்கள் மற்றம் சிற்றுண்டி நிலையங்களில் உள்ள கழிறைகள் தூய்மை மற்றும் நல்ல நறுமனம் வீசும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஙா கோர் மிங் வலியுறுத்தினார்.
இந்த தரத்தை அடையத் தவறினால், வர்த்தகர்களின் வணிக உரிமங்கள் புதுப்பிக்கப்படாது. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, எனவே இத்துறையில் சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர் தஙகளது உணவகங்கள் மற்றும் பானங்கள் விற்கும் மையங்களில் கழிப்பறைகள் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் .
இதனை கருத்திற்கொண்டு வணிக உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கவனக்குறைவாக குப்பைகளை வீசும் நபர்களுக்கு எதிராக கடுமையான அமலாக்கத்தை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது கொள்கையாகும். இதனை செயல்படுத்தும்போது , நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம், கூடுதலாக 12 மணிநேர சமூக சேவை தண்டனையும் விதிக்கப்படும்