Latestஉலகம்

வாயைப் பிளக்க வைக்கும் சம்பளம்; இலோன் மாஸ்க்கு கோடிகளைத் தாண்டி கொட்டிக் கொடுக்கத் தயாராகும் தெஸ்லா

டெக்சஸ், செப்டம்பர்-8- பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களுடன் உலக மகா கோடீஸ்வரராக வலம் வரும் இலோன் மாஸ்க், அடுத்து உலகின் முதல் ட்ரில்லியனராக அதாவது லட்சம் கோடி சம்பளம் பெறுபவராக உருவாகக் கூடும்.

தெஸ்லா நிர்ணயித்த இலக்குகளை அடைந்தால், உலகின் முதல் டிரில்லியனராக அவர் மாறலாம் என, அவரே நடத்தும் அந்த மின்சார கார் நிறுவனம் வெளியிட்ட திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தனது பங்குச் சந்தை புதுப்பிப்பில், வர்த்தக உலக வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இலோன் மாஸ்க்குக்கான அந்த ஊக்கத்தொகை பேக்கேஜ்களை தெஸ்லா சுட்டிக் காட்டியது.

அடுத்த 10 ஆண்டுகளில் தெஸ்லாவின் மதிப்பை 1 டிரில்லியனிலிருந்து 8.5 டிரில்லியன் டாலராக 10 மாஸ்க் உயர்த்த வேண்டுமென, அந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

இலக்கை அடைந்தால், தெஸ்லாவின் தலைமை செயலதிகாரியான மாஸ்க்குக் 1 டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க நிறுவன இயக்குநர்கள் வாரியக் குழு முடிவெடுத்துள்ளது.

எனினும் பணமாகத் தராமல் தெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வடிவில் அது தரப்படும்.இது மட்டும் நடந்தால் 54 வயது இலோன் மாஸ்க், வர்த்தக உலகில் மற்றுமொரு மைல்கல்லைத் தொடுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!