
கோலாலாம்பூர், டிசம்பர் 17- 2026 உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிச் சுற்றின் டிக்கெட் விலை குறித்து இரசிகர்கள் எழுப்பிய கடும் விமர்சனங்களுக்கு பின், FIFA புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது குறைந்தபட்ச டிக்கெட் விலை RM245-தாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ணப் போட்டி, வரலாற்றிலேயே மிகப்பெரியதாக இருக்கும்.
32 அணிகளுக்கு பதிலாக 48 அணிகள் பங்கேற்கவிருப்பதே அதற்குக் காரணம்.
டிக்கெட் விலை அதிகரிப்பால் சாதாரண ரசிகர்களால் போட்டியைக் காண முடியாது என முன்னதாக கவலைத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, FIFA, RM245 விலையில் டிக்கெட்டை அறிவித்து, அனைவருக்கும் அணுகுமுறை எளிதாக இருக்கும் என உறுதியளித்துள்ளது.
ஆனால், VIP மற்றும் விருந்தோம்பல் பேக்கேஜ்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட் வரை செல்லும் என்பதால், சாதாரண இரசிகர்களுக்கு இன்னும் சவாலாகவே உள்ளது என்ற விமர்சனங்கள் தொடர்கின்றன.
RM245 விலை அறிவிப்பால், உலகக் கிண்ண இரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தாலும், நீதி மற்றும் அணுகுமுறை குறித்த விவாதம் தொடர்கிறது.



