Latestமலேசியா

வீட்டுக் காவல் மறுப்பு: நஜீப் ரசாக் மேல் முறையீடு

கோலாலம்பூர், டிசம்பர் 29 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தமது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல் முறையீடு டிசம்பர் 24 ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணி உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம், நீதிபதி, அரசரின் இணை ஆணை அதாவது Royal Addendum என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட உத்தரவு அரசியலமைப்பின் 42வது கட்டுரைக்கு முரணானது என்றும், அது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் கூறி, நஜீப்பின் மனுவை நிராகரித்தார்.

SRC இன்டர்நேஷனல் நிதி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நஜீப், தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரின் 12 ஆண்டுச் சிறைத் தண்டனை, அரசரின் கருணையின் பேரில் ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!