Latestஅமெரிக்காஉலகம்

வெளிநாட்டுப் படங்களுக்கு 100% வரி; ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி

வாஷிங்டன், செப்டம்பர்-30,

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என, அந்நாட்டு அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது, உலகத் திரைப்பட வர்த்தகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“அமெரிக்கத் திரைப்படத் துறையை, குழந்தையிடமிருந்து மிட்டாய் பறிப்பது போல மற்ற நாடுகள் ‘பறித்துச்’ செல்கின்றன” என தனது Truth Social சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த வரியை சட்டரீதியாக எவ்வாறு அமல்படுத்தப் போகிறார் என்பதை அவர் தெளிவாக அறிவிக்கவில்லை.

ட்ரம்பின் அறிவிப்புக்கு Warner Bros , Comcast, Paramount, Netflix உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் Netflix பங்குகள் 1.5% வீழ்ச்சி கண்டன.

சட்ட நிபுணர்கள் ட்ரம்பின் அறிவிப்பை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

திரைப்படங்கள் அறிவுசார் சொத்து என கருதப்படுவதால், இதற்கு வரி விதிப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்தும் என்பதே அவர்களின் வாதம்.

தவிர, இன்றைய படங்கள் பல நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பு மற்றும் visual effectsz குழுக்களால் உருவாக்கப்படுகின்றன.

எனவே இது யாருடைய படம்? எந்த நாட்டின் படம்? என பிரித்து பார்ப்பது கடினம் என்ற முக்கிய அம்சத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.

தற்போதைக்கு ட்ரம்பின் அறிவிப்பு ஹோலிவூட்டில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

இந்த வரி நடைமுறைக்கு வருமா? வந்தால் எப்படி அமுலாகும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!