
ஷா ஆலாம், செப்டம்பர்-12 – ஷா ஆலாமில் நடந்துள்ள
அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவத்தில் 13 வயது சிறுவன், பள்ளிக்கு செல்லாமல் இருக்க, “தன்னை கடத்த முயன்றார்கள்” என்று பொய்யான புகார் கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளி செல்லும் வழியில் தன்னைக் கடத்த முயற்சி நடந்ததாக, தந்தை மூலம் முன்னதாக அவன் போலீஸில் புகார் செய்தான்.
ஆனால் விசாரணையின் போது போலீஸ் சற்று அதட்டிக் கேட்டதில் உண்மை வெளியானது.
அதாவது, பள்ளிக்கு செல்வதற்கு முன் தனது காலணி பூனையின் மலக் கழிவால் அழுக்கானதால், தந்தையிடம் திட்டு வாங்காமலிருக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியதை அவன் ஒப்புக்கொண்டான்.
எனினும் அவன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை; மாறாக அவனுக்கும் அவனது தந்தைக்கும் போலீஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், தந்தை, ஏற்கனவே செய்த புகாரைத் திரும்பப் பெற்றார்.
பொய்ப் புகார் கொடுப்பது குற்றம்; அதற்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 6 மாத சிறை, 2,000 ரிங்கிட் அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் இவ்வேளையில் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.