Latestமலேசியா

7 நாட்கள் 9 மலைகள் ஏறும் சாதனை முயற்சி; மழைக்கும் மத்தியில் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக கடந்த லோக சந்திரன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – ஏழே நாட்களில் 9 மலைகளை தனியாளாக ஏறி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில், இரண்டாம் கட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளார் இளைஞர் லோக சந்திரன்.

நேற்று அதிகாலை 3.26 மணிக்கு நெகிரி செம்பிலான் Gunung Datuk மலையை ஏறத் தொடங்கியவர், காலை 8.43 மணிக்கு உச்சியை அடைந்தார்.

884 மீட்டர் உயரமுடைய Gunung Datuk ஆரம்பத்தில் ஏறுவதற்கு எளிதாகத்தான் தெரியும்; ஆனால் கடினமான ஏற்றங்களால் உடல் சக்தி மற்றும் பொறுமையை சோதிக்க கூடியதாகும்;
பாதை குறுகியதாக இருப்பதும் சவாலானது; என்றாலும் உச்சியை அடைந்ததும் புகழ்பெற்ற இராட்சத பாறை மற்றும் இரும்பு ஏணி வழியே மேலே சென்றுபார்த்ததில், இயற்கை அழகின் இரம்மியத்தை இரசிக்க முடிந்ததாக அவர் சொன்னார்.

அடுத்து சிலாங்கூர் Gunung Hitam நோக்கி புறப்பட்ட லோக சந்திரன், 1,220 மீட்டர் உயரம் கொண்ட அம்மலையின் உச்சியை சுமார் 8 மணி நேரங்களில் அடைந்தார்.

அடர்ந்த காடு, இழுக்கும் பாதைகள், நீண்ட தூரம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற Gunung Hitam, மிதமான சிரமம் கொண்ட மலை எனக் கருதப்படுகின்றது.

ஆனால், புதிதாக மலையேறுபவர்களுக்கு இது பெரும் சவாலாக அமையலாம்.

குறித்த நேரத்தில் மலையேறி முடிக்க முடியாவிட்டாலும், முதன்மை இலக்கான பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் அதனை நிறைவுச் செய்ததே முக்கியம் என்றார் அவர்.

மூன்றாவது நாளாக காலையில் நெகிரி செம்பிலான் Gunung Angsi மலையிலும் பின்னர் பஹாங் Gunung Siku-விலும் லோக சந்திரனின் பயணம் தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!