
கோலாலம்பூர், டிசம்பர்-31 – டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் பதவி விலகப் போவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவியக் கடிதம் போலியானது!
எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான ஹம்சா ஜனவரி 1 முதல் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக, நேற்றிரவு முதல் ஒரு கடிதம் வைரலானது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசின் விலகியுள்ளதை அடுத்து, நடப்பு அரசியல் சூழலுக்கு ஏற்ப தாமும் பதவி விலகுவதாக ஹம்சா கூறுவது போல் அதில் எழுதப்பட்டிருந்தது.
அவரின் கையெழுத்தும் அதிலிருந்தது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தின் முகவரி அச்சிடப்பட்ட _letterhead_ கடிதமாக பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்ததால், அது உண்மையென்றே அனைவரும் நம்பினர்.
தற்போது அது போலியென உறுதியாகியுள்ளது.



