ஹாக்கி சகாப்தம் பரமலிங்கம் 91 வயதில் காலாமானார்

கோலாலம்பூர், டிசம்பர்-13, நாட்டின் ஹாக்கி சகாப்தம் C. பரமலிங்கம் நேற்று தனது 91-ஆவது வயதில் காலமானார்.
மலேசிய ஹாக்கி சம்மேளனமானா KHM அதனை ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தி, அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது.
தேசிய ஹாக்கி அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுநருமான பரமலிங்கம், 1993-ஆம் ஆண்டு பார்சலோனாவில் நடைபெற்ற உலக இளையோர் ஹாக்கிப் போட்டியில் மலேசிய அணிக்குத் தலைமையேற்றார்.
அதோடு தேசிய ஹாக்கி மேம்பாட்டுக்கு எண்ணற்ற பங்களிப்பை வழங்கியுள்ளதாக, KHM புகழாரம் சூட்டியது.
பேராக் தைப்பிங்கில் பிறந்தவரான பரமலிங்கம், 1964 தோக்யோ ஒலிம்பிக், 1958, 1962, 1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி உள்ளிட்டவற்றிலும் நாட்டுக்காக விளையாடியுள்ளார்.
1999-ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த பயிற்றுநருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார்.



