Latestஉலகம்

102 வயது ஜப்பானிய முதியவர் பூஜி மலையேறி சாதனை

இஸ்தான்புல், ஆக 27- 102 வயதான ஜப்பானிய மலையேறி ஒருவர் அந்நாட்டின் Fuji மலையை ஏறியதன் மூலம் அம்மலையை அடைந்த உலகின் மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Guinness உலக சாதனைகளை மேற்கோள் காட்டி துருக்கியின் செய்தி நிறுவனம் இத்கவலை வெளியிட்டுள்ளது. இருதய செயலிழப்பிலிருந்து மீண்ட பிறகு கோகிச்சி அகுசாவா ( Kokichi Akuzawa ) ஆகஸ்ட் 3 ஆம் தேதி 3,776 மீட்டரைக் கொண்ட Fuji சிகரத்தை அடைந்தார் என Guinness தனது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவித்தது.

Fuji மலை என்பது ஜப்பானின் ஹொன்ஷு தீவில் அமைந்துள்ள இன்னும் குமுறிவரும் ஆற்றலைக் கொண்ட ஒரு எரிமலையாகும்.

Kokichi கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் மலையை ஏறுவதோடு ஆகக் கடைசியாக தனது 96 ஆம் வயதில் Fuji மலையை ஏறியிருந்தார்.

தற்போது மீண்டும் Fuji மலையின் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்தது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு வழக்கத்தைவிட இம்முறை வித்தியசமான அனுபவம் பெற்றதாகவும் மூன்று நாட்களில் மலைஉச்சியை அடைந்தாக தெரிவித்தார்.

தனது 99 ஆம் ஆண்டு பிறந்தநாளின்போது அவர் 1,272 மீட்டர் உயரம் கொண்ட Nabewariyama மலையை ஏறுவதில் வெற்றி பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!