Latestமலேசியா

11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு திரும்பும் Fu Wa & Feng Yi : அன்புடன் விடை அளிக்கும் மலேசியா

கோலாலம்பூர், மே-10- மலேசியாவில் மறக்க முடியாத 11 ஆண்டுகளுக்குப் பிறகு Fu Wa மற்றும் Feng Yi இராட்சத பாண்டா கரடிகள் இரண்டும், வரும் மே 18-ஆம் தேதி தாயகமான சீனா திரும்புகின்றன.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு Zoo Negara-விலிருந்து கிளம்பி, KLIA விமான நிலையத்தின் விலங்குகள் ஹோட்டலுக்கு அவைக் கொண்டுச் செல்லப்படும்.

காலை 11 மணிக்குத் தாயகம் புறப்பட்டதும், அவற்றின் மலேசிய அத்தியாயம் முடிவுக்கு வரும்.

சீனாவில் இனி அவை ‘ஓய்வுக் காலத்தை’ கழிக்கும்.

இந்த பாண்டா கரடிகள் தாயகம் திரும்புவதால், உள்ளூர் பாண்டா ஆர்வலர்கள் சோகமடைந்துள்ளனர்.

பொது பிரியாவிடை நிகழ்வு எதுவும் இல்லை என Zoo Negara அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்புவதற்கான முன்னேற்பாடாக ஒரு மாத காலமாக அவையிரண்டும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், பிரியாவிடை கூற விரும்புவோர், கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே இருந்து மட்டுமே இப்போது பாண்டா கரடிகளுக்கு ‘டாட்டா’ காட்ட முடியும்.

Fu Wa & Feng Yi இரண்டும், மலேசியா – சீனா இடையிலான அரச தந்திர உறவின் நாற்பதாம் நிறைவாண்டின் அடையாளமாக, இராட்சத பாண்டா கரடிகள் இரவல் திட்டத்தின் கீழ் 2014-ஆம் ஆண்டு மலேசியா வந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!