
கோலாலம்பூர், ஜூலை 25- சட்டப்பூர்வமான பெர்மிட் இன்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 200 கிலோ Lengkuas கெடா , Bukit Kayu Hitamமைச் சேர்ந்த மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இரவு மணி 9.40 அளவில் கொள்கலனில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3,200 ரிங்கிட் மதிப்புள்ள Lengkuas பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
44,000 கிலோவுக்கு மேல் உள்ள மொத்த விவசாய விளைபொருட்களில் 200 கிலோ லெங்குவாசிற்கு Fama எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியத்தின் சான்றிதழ் இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
செல்லுபடியாகும் சான்றிதழ் அல்லது அனுமதி இல்லாமல் எந்தவொரு விவசாயப் பொருளையும் இறக்குமதி செய்வது குற்றமாகும்.