
ஒசக்கா, செப் 9 – ஜப்பானில் நடைபெற்றுவரும் 2025 ஒசாக்கா கண்காட்சியல் , எரிசக்தி பரிமாற்றம், நீர் உருமாற்றம், நீடித்த மற்றும் பருவநிலை நடவடிக்கையில் மலேசியா முன்னோடியாக செயல்பட்டுவருவதை பறைசாற்றியது.
எரிபொருள் பரிமாற்ற மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுடன் இணைந்து செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை மலேசிய பெவிலியனில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வாரம் 22 நிகழ்ச்சியை நடத்தியதால் 2025 ஒசாக்கா கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
“நிலைத்தன்மையை உற்சாகப்படுத்துதல், வாழ்க்கையை விரும்பும் திறன்” என்ற கருப்பொருளுடன், 22வது வார நிகழ்சி அமைவதால் ,மலேசியாவின் நிலைத்தன்மை, புதுமை மற்றும் முழுமையான முன்னேற்றத்திற்கான துணிச்சலான அர்ப்பணிப்பை அது உள்ளடக்கி காட்டியது. அதே வேளையில் ஆற்றல், நீர் மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றத்தில் ஒத்துழைப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கியது.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த வள மேலாண்மை மூலம் நீர் துறையை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் அதே வேளையில், நியாயமான எரிசக்தி மாற்றத்தை இயக்க கொள்கை சீரமைப்பு, புதுமை மற்றும் முதலீடு ஆகியவற்றில் விவாதங்களிலும் கவனம் செலுத்தப்பட்டன. பசுமை தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் நிலையான தீர்வுகள் குறித்த நடைமுறை உரையாடலுக்கான ஒரு தளத்தையும் இது உருவாக்குகிறது.
எரிபொருள் பரிமாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஹாஜி மாட் ஸைடி முகமட் கர்லி ( Mad Zaidi Mat Karli )இந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். இதில் மலேசியாவிற்கு சாதகமான நிலையில் பல்வேறு கருத்திணக்க ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.