2026 பட்ஜெட்: வியூக முயற்சிகளை செயல்படுத்த MCMC உறுதி

புத்ராஜெயா, அக்டோபர்-16,
2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட முக்கிய வியூகத் திட்டங்களை செயல்படுத்த, MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் உறுதியளித்துள்ளது.
இதில் முதன்மையானது மடானி SALAM கடலடி கேபிள் திட்டமாகும்.
ஜோகூர், சபா, சரவாக் மாநிலங்களை இணைக்கும் 3,190 கிலோ மீட்டர் நீள அத்திட்டத்திற்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2,700 புதிய இடங்கள் குறிப்பாக கிராமப்புற மற்றும் உட்புறப் பகுதிகளில் இணைய வசதியை மேம்படுத்துவதற்காக JENDELA 2 திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு 650 மில்லியன் ரிங்கிட் செலவில் Internet Fasiliti Kesihatan திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Sovereign AI Cloud உருவாக்கத்திற்காக 2 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்படுகிறது; இதன் மூலம் உள்ளூர் AI திறன்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப நெறிமுறைகள் மேம்படும்.
தவிர, 2026-ஆம் ஆண்டுக்குள் 80% 5G இணைப்பு இலக்கை அடையவும், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கங்களை வலுப்படுத்தவும் MCMC உறுதியளித்துள்ளது.
இந்த முயற்சிகள், நாட்டில் டிஜிட்டல் வளர்ச்சி சமமாகவும் அனைவருக்கும் கிடைக்க கூடியதாகவும் இருப்பது உறுதிச் செய்யப்படுமென MCMC கூறிற்று.