
சிபூ, டிசம்பர்-20 – நாடு முழுவதும் 2,685 ஆடம்பரக் கார்கள் சாலை வரியை புதுப்பிக்காமல் பயன்படுத்தப்பட்டுள்ளதை, சாலை போக்குவரத்து துறையான JPJ அம்பலப்படுத்தியுள்ளது.
அப்பட்டியலில் Porsche வாகனங்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக JPJ கூறியது.
சாலை வரி காலாவதியான நிலையில் கூட பல ஆடம்பர வாகனங்கள் பொது சாலைகளில் இயக்கப்பட்டு வந்தது JPJ சோதனையின் போது கண்டறியப்பட்டது.
ஆடம்பரக் கார்கள் என்பதால் விதிவிலக்கெல்லாம் கிடையாது; எனவே சாலை வரியைப் புதுப்பித்தல் சட்டப்பூர்வ கடமை என்றும், விதிமீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் JPJ எச்சரித்துள்ளது.
சாலை பாதுகாப்பை உறுதிச் செய்ய
இத்தகைய சோதனைகள் தொடரும் எனவும் அது தெரிவித்தது.



