
பெய்ஜிங், அக்டோபர்-30,
சீனாவில் உள்ள ஓர் உடற்பயிற்சி மையம், ஆடம்பர போர்ஷே (Porsche) காரைப் பரிசாக வழங்கும் சர்ச்சைக்குரிய உடல் எடை இழப்பு சவாலை அறிவித்து வைரலாகியுள்ளது.
பங்கேற்பாளர்கள் வெற்றி பெற 3 மாதங்களுக்குள் 50 கிலோ கிராம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமாம்.
இந்த விளம்பரம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது; சிலர் இதை “ஊக்கமளிக்கும்” முயற்சி என்று அழைக்கிறார்கள், மற்றவர்களோ இது நம்பும்படியாக இல்லையென்றும் பாதுகாப்பற்றது என்றும் விமர்சித்து, விரைவான எடை குறைப்பின் அபாயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
3 மாதங்களில் 50 கிலோ எடையைக் குறைப்பது என்பது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது இதயப் பிரச்னைகள், தசை இழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளிட்ட கடுமையான மருத்துவ சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அவர்கள் பரிந்துரைப்பது, ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பே…அதாவது சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் 1 முதல் 2 கிலோ வரை மெல்ல குறைப்பதே நல்லது.
என்றாலும், சர்ச்சையையும் மீறி, இந்த உடற்பயிற்சி மையம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.



