
பெய்ஜிங், மே-7 – சீனாவில் மருத்துவ விடுப்பின் போது சிங்கப்பூர் பாடகர் JJ Lin-னின் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சென்ற பெண், வேலையிருந்தே நீக்கப்பட்டார்.
Zhou எனும் அப்பெண், 2023 டிசம்பர் முதல் கடந்தாண்டு ஏப்ரல் வரை 11 மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைக் கொடுத்து 82 நாட்கள் வீட்டிலிருந்துள்ளார்.
ஆனால், அவர் வேலை செய்யும் நிறுவனம் விசாரரித்ததில், அக்காலக் கட்டத்தில் JJ Lin இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அவர் வேறு மாநிலம் சென்றது தெரிய வந்தது.
அதே சமயம் உறவினரின் திருமண விருந்தில் நேரில் சென்று பங்கேற்கும் அளவுக்கும் அவர் உடல் திடகாத்திரமாக இருந்துள்ளது.
இதனால் ‘கடுப்பான’ நிறுவனம் கடந்தாண்டு ஏப்ரலில் அவரை வேலையிலிருந்து நீக்கியது.
எனினும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி Zhou நீதிமன்றத்தை நாடினார்.
ஆதாரங்களை பரிசீலித்த நிதிமன்றமோ, மருத்துவ விடுப்பின் போது அவர் படுத்தப் படுக்கையாக இல்லையென்பதை உறுதிச் செய்தது.
ஆக பொய்ச் சொல்லி நிறுவனத்தை ஏமாற்றியதாகக் கூறி Zhou-வின் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது