
கோலாலம்பூர், டிசம்பர் 23-மலேசியக் கால்பந்து சங்கமான FAM-முக்கு அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA விதித்த தண்டனை, உலகத் தர வரிசையில் ஹரிமாவ் மலாயாவுக்கு பெரும் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், மலேசியா 5 இடங்கள் சரிந்து 121-ஆவது இடத்தையே பிடித்துள்ளது.
இதற்கு முன் 1,168 புள்ளிகளுடன் 116-ஆவது இடத்திலிருந்த மலேசியா தற்போது 22 புள்ளிகளை இழந்து, 1145.89 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
விதிமீறல்கள் காரணமாக, Cape Verde, சிங்கப்பூர், பாலஸ்தீனம் ஆகிய 3 நாடுகளுக்கு எதிரான அனைத்துலக நற்புமுறை ஆட்டங்களின் முடிவுகளை அண்மையில் FIFA இரத்துச் செய்தது.
அதாவது மலேசியாவின் வெற்றி இரத்துச் செய்யப்பட்டு, அம்மூன்றிலும் 0-3 என தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுவே, தர வரிசையில் ஹரிமாவ் மலாயாவுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.



