
கோலாலம்பூர், டிசம்பர் 4 – இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, இனவாதத்தை தூண்டும் உள்ளடக்கங்களைக் கொண்ட 1,583 ஆன்லைன் பதிவுகளை நீக்குவதற்காக மலேசிய தகவல் மற்றும் பல்லூடக ஆணையமான MCMC கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
அப்பதிவுகளில் 1,066 அதாவது 67 விழுக்காடு பதிவுகள், சமூக வழிகாட்டி மற்றும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் முன்னதாகவே நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தவறான தகவல், வெறுப்புணர்ச்சி மற்றும் மக்களிடையே பகை உணர்வை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளைக் கட்டுப்படுத்துவது MCMC-யின் சட்டப்பூர்வ கடமை என்பதை அவர் மேலும் குறிப்பிட்டார்.
இத்தகைய உள்ளடக்கங்களைப் பற்றிய புகார்களைப் பொதுமக்கள் நேரடியாக MCMC-யின் அகப்பக்கத்திலும், மாநில MCMC அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.



