
குவாந்தான், ஆகஸ்ட்-28 – 7 நாட்களில் 9 மலைகளேறும் மலேசிய சாதனை முயற்சியில் இறங்கியுள்ள Loga Chandran , இன்று நான்காம் நாளில் திரெங்கானு Gunung Sarut-டை ஏறி முடிக்கவிருந்த நிலையில், மலையிலிருந்து இறங்கிக் கொண்டுருந்த சமயம் “penyengat” என்றழைக்கப்படும் பூச்சி கடித்து மயக்குத்துக்குள்ளானார்.
உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு, மீண்டும் சுயநினைவுக்கு திரும்பிய இவர், எப்படியோ தன்னை தேற்றிக் கொண்டு தனது இன்றைய சவாலை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
கீழே இறங்கியவுடன், கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தாலும், தம்முடைய இலக்கை அடைய இவர் நாளை தனது பயணத்தை தொடர உறுதியாக இருக்கிறார்.
நாளை, கெடாவில் உள்ள 1217 மீட்டர் உயரமான Gunung Jerai மலை ஏறவுள்ள நிலையில், இதுவரை, ஜோகூர் Gunung Ledang, நெகிரி செம்பிலான் Gunung Datuk, Gunung Angsi, சிலாங்கூர் Gunung Hitam, பஹாங் Gunung Siku மற்றும் திரெங்கானு Gunung Sarut ஆகியவற்றை வெற்றிகரமாக ஏறி இறங்கியுள்ளார்.