
கூச்சிங், நவம்பர்-17, சரவாக் மாநில அரசு, கூச்சிங்கில் ‘Grab Sampan’ படகு சேவை முன்னோடித் திட்டத்தைத் தொடங்க பரிசீலித்து வருகிறது.
மின்சார சக்தியால் இயங்கும் அப்படகுகளுக்கு Grab செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
கட்டணம் முழுக்க முழுக்க ரொக்கமில்லா முறையாகும்.
முதலில் 6 மாதங்களுக்கு பரீட்சார்த்த முறையில் இந்த ‘Grab Sampan’ சேவை அறிமுகப்படுத்தப்படும்.
Kuching Waterfront நெடுகிலும் 8 இடங்களில் பயணிகள் ஏற்றி-இறக்கி விடப்படுவர்.
கூச்சிங்கின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய படகு போக்குவரத்தை, நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சியே இதுவென சரவாக் பிரீமியர் துன் அபாங் ஜொஹாரி ஓப்பேங் கூறினார்.
தவிர, சுற்றுச்சூழல் தோழமை, சுற்றுலா கவர்ச்சி, மக்கள் வசதி என அனைத்தையும் ஒருங்கே தரும் திட்டமாக இந்த ‘Grab Sampan’ விளங்கும் என்றார் அவர்.
மாநில போக்குவரத்து அமைச்சும் – சரவாக் ஆறுகள் வாரியமும் இந்த உத்தேசத் திட்டத்தின் சாத்தியத்தை ஆழமாக ஆராயவுள்ளன.



