
கோலாலம்பூர், ஆகஸ்ட்-3,
பணி ஓய்வுப் பெற்ற இ.பி.எஃப் சந்தாதாரர்களை, மாதந்தோறும் பணத்தை மீட்க அனுமதிக்கும் உத்தேசப் பரிந்துரை, நடப்பிலுள்ள சந்தாதாரர்களைப் பாதிக்காது.
நிதித்துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
அப்புதியக் கொள்கை அமுலாக்கம் கண்ட பிறகு இ.பி.எஃப் சந்தாதாரர்களாக பதிந்துக் கொள்ளும் புதிய உறுப்பினர்களை மட்டுமே அது உட்படுத்தியிருக்கும்.
ஒருவேளை நடப்பிலுள்ள சந்தாதாரர்கள் அவர்களாக விரும்பினால் புதிய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்; மற்றபடி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றார் அவர்.
வருங்காலத்தில் இ.பி.எஃப் சேமிப்புகள் 2 பகுதிகளாகப் பிரிக்கப்படும்.
Flexible Savings அதாவது எந்த நேரத்திலும் பணத்தை மீட்கக் கூடிய சேமிப்பு.
மற்றொன்று Income Savings அதாவது வருமான சேமிப்பு; இது, ஓய்வூதிய நிதி தீர்ந்து போகும் வரை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
ஓய்வுப் பெற்ற பிறகு மலேசியர்களுக்கு பாதுகாப்பான நிதி உத்தரவாதத்தை வழக்கும் நோக்கில், இப்புதிய முறை உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ஆரம்பக் கட்ட பரிந்துரை மட்டுமே; இறுதி முடிவெடுக்கும் முன் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் நிச்சயம் பெறப்படுவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யுமென, துணையமைச்சர் சொன்னார்.