Latestமலேசியா

உலக ரோபோட்டிக்ஸ் & கணினி அறிவியல் ஒலிம்பியட் 2025 போட்டியில் ஜோகூர் ரினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 7- அண்மையில் இந்தோனேசியாவின் Bandung நகரில் நடைபெற்ற உலக ரோபோட்டிக்ஸ் & கணினி அறிவியல் Olympiad 2025 போட்டியில் ஜோகூர் ரினி தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிபைன்ஸ், இந்தியா, தென் கொரியா, வங்காளதேசம் மற்றும் Kazakhstan ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 108 குழுக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

அறிவியல் மற்றும் புத்தாக்க படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டியில் Sound Wave Alert System பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு IYSA சிறப்பு விருதுக்கான மற்றொரு தங்கப் பதக்கத்தையும் ரினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.

மேலும் ECO Grow Seed Pot பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற ரினி தமிழ்ப் பள்ளி ,The Vision Superheroes IOT பிரிவிலும் , Microbial Alchemy பிரிவிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

இந்த போட்டியில் ரினி தமிழ்ப் பள்ளியின் ஆசிரியைகளான திருமதி பவித்ரா வீரபதி மற்றும் திருமதி திவ்யா முருகன் ஆகியோர் அனைத்துலக நீதிபதிகளாக பணியாற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!