Latestமலேசியா

AI தொழில்நுட்பத்தில் மலேசியா தொட்ட மைல்கல்; LLM மொழி மாதிரியை உருவாக்கி சாதனை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக மலேசியர்களுக்கு LLM எனப்படும் மலேசிய பெரிய மொழி மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் அறிமுகம் செய்து வைத்தார்.

MITEC எனப்படும் மலேசிய அனைத்துலக கண்காட்சி மற்றும் வாணிப மையத்தில் ASEAN AI மாநாட்டை நேற்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் அவ்வாறு சொன்னார்.

ஆசியான் வட்டாரம் இப்போது உள்ளடக்கிய, நெறிமுறை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுடன் கூடிய AI பயன்பாட்டை வடிவமைக்கும் ஒரு தலைமுறை வாய்ப்பைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் பாரம்பரியம் மற்றும் நன்னெறி மதிப்புகளை சமரசம் செய்யாமல் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதும் முக்கியம் என்றார் அவர்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 13-ஆவது மலேசியத் திட்டத்தில், AI தேசியக் கட்டமைப்புத் திட்டம் இடம் பெற்றுள்ளதையும், இதன் வழி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு மலேசியருக்கும் AI நன்மையைக் கொண்டு வருவதை மலேசியா உறுதிச் செய்யுமென்றும் அன்வார் சொன்னார்.

இவ்வேளையில் முழுக்க முழுக்க மலேசியர்களால் மலேசியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த LLM மாதிரி, உள்ளூர் மொழி, கலாச்சாரம், அன்றாட வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

அந்த அறிமுக விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இந்த LLM என்பது மலேசியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளின் மொழியியல் அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு பயிற்சி மையமாகும் என்றார்.

பயிற்சி முழுவதும் மலேசிய சூழல் மற்றும் நிலைமைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், வேலை வாய்ப்புகளில் AI ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் எந்த வேலைகள் மற்றும் துறைகள் பாதிக்கப்படும் என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் தற்போது தரவுகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்தத் தாக்கத்தை குறைக்க, முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களுக்கு முன்கூட்டியே திறன் மேம்படுத்தல் மற்றும் மறுபயிற்சி அளிக்கும் தகுதி திட்டத்தை மடானி அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் கோபிந்த் சொன்னார்.

இதன் நோக்கம், AI-யின் தாக்கம் ஏற்பட்டதும், பாதிக்கப்பட்ட பணியாளர்கள் புதிய திறன்களுடன் தங்களை மாற்றிக் கொண்டு தொடர்ந்து பணியாற்றும் வகையில் தயாராக இருப்பதை உறுதிச் செய்வதாகும்.

என்றாலும், AI மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த LLM மாதிரி,
அனைத்து வயதினருக்கும் வேலை நிலைகளுக்கும் தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Multi-model எனும் பலவடிவ வடிவிலும் இது கிடைக்கிறது; இதனால் உரை, குரல் மற்றும் காட்சி வடிவங்களிலும் தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!