
பாடாங் பெசார், ஆகஸ்ட்-15 – காதலியுடன் கங்காருக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில், பெர்லிஸ் பாடாங் பெசாரில் தாங்கள் தங்கியிருந்த முதியோர் இல்லத்தைத் தீ வைத்து கொளுத்தியுள்ளார் 81 வயது முதியவர்.
சமையலறையில் தொடங்கிய தீ வரவேற்பறை வரை பரவி கடும் சேதங்களை ஏற்படுத்தியது.
வரவேற்பறை மட்டுமே தீயில் 50 விழுக்காடு அழிந்துபோனது.
எனினும் அங்குத் தங்கியுள்ள 20 முதியோர்களும் காப்பாற்றப்பட்டனர்.
மொத்த சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது.
தீயை மூட்டி நாசவேலையில் ஈடுபட்டதன் பேரில் தாத்தா விசாரிக்கப்படுவதாக பாடாங் பெசார் போலீஸ் கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.