
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15- அமெரிக்காவில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்து பூசாரி, புதிய வாகனத்திற்கு ஆசீர்வாதம் கோரும் பாரம்பரிய கார் பூஜையை கச்சிதமான உச்சரிப்புடன் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
சமஸ்கிருத ஸ்லோகங்களை அவர் அசத்தலான துல்லியத்துடன் ஓதுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறை சொல்ல முடியாத அளவுக்கு அவர் மந்திரங்களை உச்சரிப்பதும், இந்து சடங்குகளை நேர்த்தியாக செய்வதும் வலைத்தளவாசிகளை பிரமிக்க வைத்துள்ளது.
இதனிடையே வைரலான இவரது காணொளிக்கு “இந்தியாவில் நகர்ப்புற மக்களை விட இந்த ஆப்பிரிக்க பூசாரியின் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது” போன்ற கருத்துகள் குவிந்து வருகின்றன.
இதுபோன்ற தருணங்கள், இந்து மரபுகளின் உலகளாவிய ஈர்ப்பை உணர்த்துவதோடு, பக்தி என்பது எல்லைகள் கடந்தது என்பதை பறைச்சாற்றுவதாகவும் வலைத்தளவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.