
அம்பாங், ஆகஸ்ட்-18 – அம்பாங் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவரை அண்மையில் தகாத வார்த்தைகளால் திட்டி, உடல் ரீதியாகத் தாக்க முயன்ற சந்தேகத்தில், 61 வயது முதியவர் கைதாகியுள்ளார்.
30 வயது மருத்துவர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி செய்த போலீஸ் தொடர்பில் மறுநாள் பிற்பகல் சந்தேக நபர் கைதானார்.
சம்பவத்தன்று, மருத்துவருடனான சந்திப்பு நேரத்தைத் அவர் தவற விட்டுள்ளார்; இதனால் புதியத் தேதி வழங்கப்பட்டது.
இது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதை வெளிக்காட்டும் விதமாக அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவரை அடிக்க பாய்ந்து, முகத்தில் குத்த முயன்றதாகவும் போலீஸ் புகாரில் கூறப்பட்டது.
கைதான முதியவருக்கு ஏற்கனவே 3 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் முதியவர் விடுவிக்கப்பட்டார்.
விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக இவ்வாரம் அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.