
பத்து மலை, ஆகஸ்ட்-25 – Vishal Steremxy Enterprise ஏற்பாட்டில் சனிக்கிழமை பத்து மலை, Shenga மாநாட்டு மண்டபத்தில், சிறியோர் முதல் பெரியோர் வரை கவரும் வண்ணம் ‘Old is Gold Live in KL’ இசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
இதில் Rakshita, jayasree, Divine Divinesh, மூக்குத்தி முருகன், முகேஷ் மற்றும் எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்பு இடம்பெற்றது.
காலத்தால் அழியாத மெல்லிசைப் பாடல்களைப் பாடி, வந்திருந்த இரசிகர்களை அவர்கள் கட்டிப் போட்டனர்..
Datuk DR. Ravee Packirasamy, Thangadurai, Mahendren, Dato Ak, Dato Gaffor, Dr Puvaneaish, Dato Sri Krishnamoorthy, Datuk Dr S Prabakaran, K Kularajah, Indra, Sam, Datuk Burhan Muhammad, Dato Seri Ganesan, Suresh, S.Sarasvathy உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.
பழம் பாடல் விரும்பிகளுக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்ததாக, Vishal Steremxy Enterprise நிறுவனத்தின் விஷால் கூறினார்.
இசை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து Tasly Marketing Sdn Bhd நிர்வாக இயக்குநர் டத்தோ Dr ரவீ பக்கிரிசாமி பேசினார்.
வாரக் கடைசி விடுமுறையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேயர்களுக்கும் பாடகர்களுக்கும் டத்தின் எஸ். காவேரி நன்றித் தெரிவித்தார்.
முதன் முறையாக இது போன்ற பழம் பாடல் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவத்தை நேயர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
இறவா இசை விரும்பிகளுக்கு நல்லதொரு விருந்தாய் இந்த Old is Gold நிகழ்ச்சி அமைந்தது.