
கோலாலம்பூர், செப்டம்பர் 1 – இன்று அதிகாலை SKVE சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலோக் பங்க்லிமா காராங் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியதில் மூவர் வாகனத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்தனர்.
மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் ஒருவர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு விபத்தில் பலியானார்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நால்வரையும் மீட்டனர்.
அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.