
கோலாலம்பூர், செப்டம்பர்-6 – மருத்துவர்களுக்கான on-call அலவன்ஸ் தொகை உயர்வு அடுத்தாண்டு செயல்படுத்தப்படலாம் என, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி அஹ்மாட் கோடி காட்டியுள்ளார்.
மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலத்தின் தொடர் கேள்விகளின் எதிரொலியாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கான on-call அலவன்ஸ், மிகைநேர அலவன்ஸ் மற்றும் வட்டார பயண படித்தொகை உள்ளிட்ட பிற சலுகைகளை KKM தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறது.
சில மாதங்களாகவே நடைபெற்று வரும் இந்த ஆய்வுகளை விரைந்து இறுதிச் செய்ய அமைச்சு இலக்குக் கொண்டிருப்பதாக Dr சுல்கிஃப்ளி சொன்னார்.
ஆய்வறிக்கை விரைவில் அமைச்சரவையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்; அனைத்தும் கைக்கூடினால், 2026- ஆம் ஆண்டில் அதனை செயல்படுத்த முடியும் என ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
குறைந்த செலவையே உட்படுத்தியுள்ள போதிலும், இந்த on-call அலவன்ஸ் தொகை உயர்வை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக, Dr லிங்கேஷ்வரன் முன்னதாக சுகாதார அமைச்சை விமர்சித்தார்.
கடந்த பட்ஜெட்டிலேயே இது குறித்த அறிவிப்பு இடம் பெற்று விட்டது; இருந்தும் இதுவரை அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியல்ல…
ஏராளமான இளம் மருத்துவர்கள் போதிய சம்பளம், அலவன்ஸ் இன்றி வாழ்க்கைச் செலவின உயர்வுடன் போராடி வருவதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.