Latestஉலகம்

கலிபோர்னியா லாங் பீச் துறைமுகத்தில் டஜன் கணக்கான நீரில் விழுந்த கொள்கலன்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ், செப் 10 – தென் கலிபோர்னியாவின் (California) லாங் பீச் ( Long Beach ) துறைமுகத்தில் நேற்று காலை ஒரு கப்பலில் இருந்து சுமார் 67 கொள்கலன்கள் நீரில் விழுந்ததாக அமெரிக்காவின் அந்த இரண்டாவது பரபரப்பான துறைமுகத்தின் அவசர உதவியாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு துறைமுகத்தின் வேறு எந்தவொரு நடவடிக்கைகளும் பாதிக்கப்படவில்லை.

போர்த்துகல் கொடியைக் கொண்ட 837 அடி அல்லது 255 மீட்டர் உயரமுள்ள Mississippi கப்பலில் வந்தடைந்த கொள்கலன்கள் Pier G கொள்கலன் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அவை கடலில் விழுந்தன.

இதனால் கப்பலுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய படகு சேதமடைந்தது. அந்த Mississippi கப்பல் சீனாவின் யாண்தியான் (Yantian ) துறைமுகத்திலிருந்து Long Beachற்கு வந்தது.

கொள்கலன்களைப் பாதுகாக்க குழுவினர் பணியாற்றியதால், முனையத்தில் சரக்கு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Long Beach துறைமுக பொது தகவல் அதிகாரி ஆர்ட் மாரோக்வின் ( Art Marroquin ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!