Latestமலேசியா

சாலைகளில் சுற்றித் திரிந்த பசு மாடுகள் பறிமுதல்; பினாங்கு மாநகர் மன்றம் அதிரடி

ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-15 – ஜோர்ஜ்டவுன் Tanjung Tokong பகுதியில் இடைஞ்சல் கொடுக்கும் வகையில் மேய்ந்துகொண்டிருந்த பசு மாடுகள் குறித்து மீண்டும் மீண்டும் புகார்கள் பெறப்பட்டதால், 2 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டன.

பக்கத்துக் குடியிருப்பான Desiram Tanjung வாழ் மக்கள் கொடுத்த புகார்களை அடுத்து, பினாங்கு மாநகர் மன்றமான MBPP அந்த அதிரடியில் இறங்கியது.

மேலுமிரு பசு மாடுகள் Air Itam-மில் உள்ள Jalan Zoo-வில் பறிமுதல் செய்யப்பட்டன; அவையும் ஏலத்தில் விடப்பட்டதை MBPP அமுலாக்கப் பிரிவு அதிகாரி Noorazrein Noorazlan Ong உறுதிப்படுத்தினார்.

அந்நடவடிக்கை சட்டபூர்வமானது, நியாயமானது மற்றும் பொதுப் பாதுகாப்பைப் பாதுகாக்க அவசியமானது என்றார் அவர்.

சாலை பாதுகாப்பு, குடியிருப்பாளர்களுக்கு இடையூறுகள், கால்நடை தாக்குதல் சம்பவங்கள் மற்றும் பொது இடங்களில் சாணம் ஆகியவை தொடர்பான புகார்கள் வந்ததாக அவர் சொன்னார்.

நேற்று முன்தினம், Tanjong Tokong-கில் உள்ள தனது கால்நடைகள் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறுவது போல் சுதந்திரமாக சுற்றித் திரியவில்லை என்றும் கால்நடை உரிமையாளர் ஒருவர் முறையிட்டிருந்தார்.

அதற்கு செவிசாய்க்காமல் ஏலத்தை மேற்கொண்டதாகக் கூறி MBPP-யை PRM எனப்படும் மலேசிய மக்கள் கட்சி சாடியிருந்தது.

எனினும் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் கால்நடை உரிமையாளர் ஏலத்திற்கு வரவில்லை; எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரின் 2 மாடுகளும் ஏலத்தில் விற்கப்பட்டதாக MBPP விளக்கியது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!