
கோலாலம்பூர், செப்டம்பர்-27,
மலேசியாவின் புதிய அடையாளமாக விளங்கும் Merdeka 118 கோபுரத்தில் Maybank சின்னம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
இதையடுத்து, 678.9 மீட்டர் உயரத்தில் உலகின் இரண்டாவது உயரமான கோபுரமாக விளங்கும் இந்த Merdeka 118, இனி Maybank பெயருடன் ஒளிவீசும்.
மலேசியாவின் முன்னணி வங்கியான Maybank, விரைவில் தனது தலைமையகத்தை இந்த கோபுரத்திற்கு மாற்றவுள்ளது.
33 தளங்களை ஆக்கிரமிக்கும் முதன்மை வாடகைத்தாரரான Maybank, தனியுரிமை கொண்ட சின்ன உரிமையையும் பெற்றுள்ளது.
இது வங்கியின் வணிக முத்திரையை மலேசியாவின் பெருமைமிகு கட்டடக் கலையோடு இணைப்பதோடு, கோலாலம்பூர் மாநகரின் வானுயுரக் காட்சிக்கும் புதிய ஒளியை வழங்குகிறது.
இப்புதிய அடையாளம், இவ்வட்டாரத்தின் முன்னணி வங்கியாக Maybank-கின் அந்தஸ்தை நிலைநிறுத்துவதோடு, மலேசியாவின் வளர்ச்சி, முயற்சி மற்றும் நிலைத்தன்மைக்கு வரும் ஆண்டுகளில் வெளிச்சமாக விளங்கப்போகிறது.