Latestமலேசியா

1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களை PERKESO பாதுகாக்கிறது, 10 ஆண்டுகளில் நன்மைகள் 12% உயர்வு

கோலாலம்பூர், செப்டம்பர்-29 – மலேசியாவில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்போது சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர்.

இது கடந்த 10 ஆண்டுகளில் 63 விழுக்காடு உயர்வாகும்.

சுயதொழில் செய்யும் 10 லட்சம் பேர் கூட வேலையிட விபத்து பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.

PERKESO சந்தாதாரர்களுக்கான சராசரி நன்மைகள் 2015-ஆம் ஆண்டில் RM5,200 இருந்து, இவ்வாண்டில் RM5,800-ராக 12 விழுக்காடு உயர்ந்துள்ளன.

கடந்தாண்டு செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள் நன்மை விகிதத்தை மேலும் 20 விழுக்காடு உயர்த்தியது.

நன்மைகள் அதிகரித்திருந்தாலும், PERKESO இழப்பீட்டுக் கோரிக்கைகள் 8 விழுக்காடே நிலைத்திருக்கின்றன.

இது PERKESO எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பலனாகும்; அதில் தொழில் பாதுகாப்பு பிரச்சாரங்கள் மற்றும் கோரிக்கை முறையில் AI பயன்பாடும் அடங்கும்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 WSSF உலக சமூக பாதுகாப்பு மாநாட்டு தொடக்க விழாவில் இது தெரிவிக்கப்பட்டது.

5 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 135 நாடுகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்; அதில் அமைச்சர்கள், தலைமை செயல் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பான ILO, உலக வங்கி போன்ற
உலக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 உலக சமூக பாதுகாப்பு மாநாட்டை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!