சரவாக் ஆற்றில் பிடிபட்ட முதலையின் வயிற்றில் மனித உடல் பாகங்கள்; காணாமல் போன ஆடவருடையதா என விசாரணை

பிந்துலு, அக்டோபர்-2 – சரவாக், பிந்துலு, சுங்கை செமானோக் ஆற்றில் நேற்று பிடிபட்ட முதலையின் வயிற்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தலை, தாடை, வயிறு, தொடை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதாக, மாநில தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
எனினும், அந்த உடல் பாகங்கள், கடந்த சனிக்கிழமை அங்கு முதலைத் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்பட்ட Jeffery Masing Win எனும் ஆடவருடையதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அச்சம்பவத்தில் இரவு 8 மணிக்கு தன் அண்ணனோடு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த Jeffry-யை திடீரென முதலைத் தாக்கி இழுத்துச் சென்றது.
காணாமல் போனவரை தேடும் பணிகள் நேற்று நான்காவது நாளாக தொடர்ந்த வேளை, கிராம மக்கள் வெற்றிகரமாக ஒரு முதலையைப் பிடித்தனர்.
ஒரு வேளை காணாமல் போனவரைத் தாக்கிய முதலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அதன் வயிற்றை கிழித்துப் பார்த்த போது, இந்த மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.