Latestமலேசியா

7 குற்றச்சாட்டுக்களை கைவிடும்படி கோரும் முஹிடின் மனுவை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்தது

கோலாலம்பூர், அக் 7-

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருமானம் பெற்றதாக கொண்டுவரப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தாக்கல் செய்த மனுவை சட்டத்துறை தலைவர் அலுவலகம் நிராகரித்துவிட்டது.

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருதீன் வான் லாடின்
( Wan Shaharuddin Wan Ladin) இன்று உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது இதனை அறிவித்தார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று முஹிடின் வழக்கறிஞர் குழுவிடமிருந்து இது தொடர்பான மனுவை பெற்றதாகவும் ஆகஸ்டு 22 ஆம் தேதி அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக வழக்கறிஞர்களிடம் தெரிவித்துவிட்டோம் என அவர் கூறினார்.

எனவே, வழக்கு விசாரணைக்கான தேதிகளை நிர்ணயிக்குமாறு அரசு தரப்பு கோருகிறது என அரசு தரப்பு துணை வழக்கறிஞர் மஹாடி அப்துல் ஜுமாஹாட்டுடன் ( Mahadi Abdul Jumaat ) வழக்கைக் நடத்திவரும் Wan Shaharuddin கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணையைத் தொடங்க அரசு தரப்பு தயாராக இருப்பதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களும் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!