
லங்காவி, அக் 28 –
லங்காவி, புக்கிட் மாலுட்டில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் தளத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெர்ரிகள் அல்லது பயணப் படகுகள் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டன.
அதிகாலை மணி 2.15 க்கு நடந்த இந்த சம்பவத்தில், எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லையென கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைமை தீயணைப்பு அதிகாரி முகமட் ஜம்ரி அப்துல் கனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்து மூன்று பெர்ரிகள் தீயினால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர்.
அதிகாலை மணி 3.37க்கு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதோடு தீயிலிருந்து தவிர்ப்பதற்காக மற்றொரு பெர்ரி பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்டது.
இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் மதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.



