Latestமலேசியா

ஓய்வூதியத் தொகையைப் பெறும் வயதை 65 ஆக உயர்த்த பரிந்துரை – உலக வங்கி

கோலாலம்பூர், அக்டோபர் 30 –

மலேசியாவின் மக்கள் தொகை மெதுவாக முதியோர் சமூகமாக மாறிவரும் நிலையில், தற்போதைய ஊழியர்கள் நல நிதி (KWSP) தொகையை, 55 வயதில் பெறும் விதியை மாற்றியமைக்க வேண்டுமென்று உலக வங்கி (World Bank) கருத்துரைத்துள்ளது.

அதனால், ஓய்வூதியத் தொகையைப் பெறும் குறைந்தபட்ச வயதை 65 முதல் 70 வயதுக்கு உயர்த்துவது மலேசியாவின் தற்போதைய மக்கள் அமைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு ஓய்வூதிய வயதை உயர்த்துவது மூலம் சமூக நல ஓய்வூதியத்தை (social pension) மேம்படுத்தி, நிதி பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.

தற்போது மலேசியாவில் சமூக ஓய்வூதியம் 60 வயதில் வழங்கப்படுவது மற்ற நாடுகளை விடக் குறைவானதென்றும், இத்திட்டம், இன்று மலேசியர்களின் அதிகபட்ச ஆயுட்காலத்தைப் பொருத்து புதுப்பிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வயதான தலைமைக்குடும்பங்களில் அதாவது 60 வயதுக்கு மேற்பட்டோரிடையே 24 சதவீதமும், 65 வயதுக்கு மேற்பட்டோரிடையே 42 சதவீதமும் மற்றும் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களிடையே 49 சதவீத வறுமை நிலையும் அதிகரித்து வருகின்றது.

புதிய வயது வரம்பு 65 வயது முதல் 70 வயதுக்கிடையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தற்போதைய பெறுநர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல், புதிய பெறுநர்களுக்கே இந்நிபந்தனை பொருந்த வேண்டும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

இம்மாற்றம் அரசுக்கு நிதிசுமையில்லாமல், தகுதியுள்ள முதியோருக்கு உயர்ந்த ஓய்வூதியம் வழங்க உதவும் என்று அந்த அறிக்கை முடிவுறுத்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!